×

கும்கி ஆபரேஷன்களில் ஈடுபட்ட யானை கலீமுக்கு 60 வயது பூர்த்தி அடைந்த நிலையில் ஓய்வு அளித்து வனத்துறை மரியாதை..!!

பொள்ளாச்சி: தமிழ்நாட்டில் பல்வேறு கும்கி ஆபரேஷன்களில் செயல்பட்டு வெற்றி பெற்ற கும்கி யானை கலீமுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டாப்ஸ்லிப் அருகே கோழி கமுத்தி யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் 26 யானைகள் வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதில் கோழி கமுத்தி முகாமில் உள்ள கலீம் என்று கும்கி யானை கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களில் காட்டு யானைகளை பிடிக்கும் ஆபரேஷன்களில் பங்கெடுத்துள்ளது. 60 வயது பூர்த்தியடைந்த கும்கி யானை கலீமுக்கு வனத்துறையினர் மரியாதை செலுத்தி வழி அனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியில் சுற்றுசூழல் மற்றும் வனத்துறை கூடுதல் முதன்மை செயலர் சுப்ரிய சாகு மற்றும் வனத்துறை முதன்மை தலைமை பாதுகாவலர் ஸ்ரீனிவாச ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  



Tags : Kaleem ,Kumki , Kumki, Operation, Elephant, Kaleem, Rest, Forestry, Respect
× RELATED டி.வி நடிகர் ஹீரோவாக அறிமுகமாகும் தூக்குதுரை